சுடச்சுட

    

    காட்பாடியில் பி.எஸ்.என்.எல். மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து சனிக்கிழமை நடத்திய மக்கள் நீதிமன்றத்தில்  20 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

    வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள கட்டண நிலுவையை வசூலிப்பதற்காக இந்த மக்கள் நீதிமன்றம் காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.

    வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி ருக்மாங்கதன் மற்றும் எஸ்.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் பி.ராஜேந்திரன், ஆர். நெப்போலியன், ஜி.யுவராணி, எஸ்.சத்தியவேல்  மற்றும் பிஎஸ்என்எல் முதன்மை கணக்கு அலுவலர் டி.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 20 வழக்குகளுக்கு சமாதானத் தீர்வு மேற்கொள்ளப்பட்டு, ரூ.34 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai