சுடச்சுட

    

    ஆலங்காயத்தை அடுத்த பெத்தூரைச் சேர்ந்த தொழிலாளி சீனன் (60), மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

    இவர் வெள்ளிக்கிழமை ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடிக்கச் சென்றார். அப்போது மழை பெய்ததால், கடை அருகேயிருந்த இரும்பு கேட்டை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    செம்மரங்கள் கடத்தல்

    ஆம்பூர், ஜூலை 20: மாதனூர் அருகேயுள்ள அகரம்சேரி கிராமத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சமூக காட்டில், 41 செம்மரங்கள் உள்ளன.

    வெள்ளிக்கிழமை இரவு பணியிலிருந்த வனவர் ரத்தினம், வனக்காவலர் செல்வம் ஆகியோர் மழையின் காரணமாக, அருகேயிருந்த பள்ளியில் ஒதுங்கியிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் செம்மரங்களை வெட்டி வாகனத்தில் ஏற்றினராம்.  இதைப் பார்த்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது, தப்பிச் சென்றனர். காட்டில் சென்று பார்த்தபோது, 7 செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருப்பதும், ஒரு மரம் வெட்டப்பட்டு கீழே இருந்ததும் தெரியவந்தது.

    புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். ஆம்பூர் டிஎஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

    கால்வாயில் பெண் சிசு சடலம் கண்டெடுப்பு

    குடியாத்தம், ஜூலை 20: குடியாத்தம் நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலம் சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் அளித்த தகவலின்பேரில், நகர. போலீஸார் அங்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காரில் ஆண் சடலம்

    வாலாஜாபேட்டை,ஜூலை 20: காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு உணவகம் எதிரே நின்றிருந்த பழுதடைந்த காரில் ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.

    வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கேட்பாரற்று இக்கார் நின்றிருந்தது. சனிக்கிழமை பிற்பகலில் காரிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் ரகுராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்றபோது காரில் ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.

    சடலத்தை போலீஸார் கைப்பற்றி, பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காரில் காஞ்சிபுரத்தை அடுத்த விசாரைச் சேர்ந்த முருகன் (25) என்பவரின் ஓட்டுநர் உரிமம் இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

    ரயில்வே கேட் மீது லாரி மோதல்

    அரக்கோணம், ஜூலை 20: அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் திருமால்பூர் ரயில் நிலையம் அருகே பள்ளூர் ஊராட்சியில் தானியங்கி ரயில்வே கேட் உள்ளது.

    இங்கிருந்த பணியாளர் மின்சார பொத்தானில் திறப்பதற்குள் வேகமாக வந்த லாரி கேட்டை இடித்து தள்ளிவிட்டு வேகமாகச் சென்று விட்டதாம். இதையடுத்து, கேட் மறுபடியும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாம்.

    இதுதொடர்பாக அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோகரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இது

    குறித்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai