Enable Javscript for better performance
ரத்தினகிரி, ஆற்காட்டில் எல்.ஐ.சி. துணை அலுவலகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    ரத்தினகிரி, ஆற்காட்டில் எல்.ஐ.சி. துணை அலுவலகங்கள்

    By ராணிப்பேட்டை  |   Published on : 21st July 2013 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்படும் துணை கிளை அலுவலகங்களைப் போல் ரத்தினகிரி, ஆற்காடு, கலவை, பொன்னை, திருவலம் ஆகிய இடங்களிலும் துணை அலுவலகங்களை எல்.ஐ.சி. நிர்வாகம் திறக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை எல்.ஐ.சி. முகவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    ராணிப்பேட்டையில் சனிக்கிழமை சங்கத்தின் கோட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் வி.எஸ்.தியாகராஜன், பொருளாளர் எஸ்.நாராயணன், செயலர் கே.கங்காதரன், சங்க செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜேந்திரன், குமரேசன், சந்திரன், எஸ்.ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai