Enable Javscript for better performance
ராணிப்பேட்டைக்கு ஆகஸ்ட் 10-ல் கருணாநிதி வருகை- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டைக்கு ஆகஸ்ட் 10-ல் கருணாநிதி வருகை

    By ராணிப்பேட்டை  |   Published on : 21st July 2013 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வருகை தரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என வேலூர் மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

    ராணிப்பேட்டையில் சனிக்கிழமை கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், ஜூலை 27ஆம் தேதி திமுக இளைஞரணியின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கட்சியின் துணை பொதுச்செயலர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்டச் செயலர் ஆர்.காந்தி, முன்னாள் மேயர் பா.கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai