Enable Javscript for better performance
வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி

    By வேலூர்,  |   Published on : 21st July 2013 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அடங்கிய 15 வார்டுகளில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

    இப்பணியை வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ வி.கே.ஆர். சீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மேயர் பி.கார்த்தியாயினி, எம்எல்ஏக்கள் டாக்டர் வி.எஸ்.விஜய், ம.கலையரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் பங்கேற்க 4-வது மண்டலக்குழு தலைவர் அய்யப்பனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் ஆணையர் அறையில் நிகழ்ச்சி நடைபெறும்போது அமர்ந்திருந்தார். விழா முடிந்த பிறகுதான் அவருக்கு நிகழ்ச்சி முடிவுற்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேண்டுமென்றே தன்னை புறக்கணித்ததாக அவர் கூறினார். இதையடுத்து, அங்கிருந்தோர் சமரசம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai