சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வரும் 8 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வேலூர் மாவட்டத்தில் 384 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன.

    8 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் அரசு அனுமதியின்றி இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளை நடத்த உரிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அதையடுத்து, இப்பள்ளிகள் மூடப்படுகின்றன.

    மூடப்படும் பள்ளிகள் விவரம்: சோளிங்கர் மோட்டூர் ஸ்ரீசாய்பாபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஒடுக்கத்தூர் சரஸ்வதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, மண்டலவாடி பத்மஸ்ரீ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருப்பத்தூர் மிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, பாப்பனூர் வெற்றி விகாஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, பிரமிட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, செவ்வாத்தூர் சன்பீம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, திமிரி வாழைப்பந்தல் ரோடு ஸ்ரீஅருணாசலம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai