சுடச்சுட

    

    அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் 25 வாரங்கள் நடைபெற உள்ள பிரசாரத்தை துண்டு பிரசுரங்களை வழங்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார் .

    நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் ஜி.ஏ. டில்லிபாபு தலைமை வகித்தார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஆர். பாலசுப்பிரமணி, மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் ஆர். வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் வர்தா ரஷீத், இளைஞரணி நகரச் செயலர் கே.ராஜன், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ கே.ஜி. ரமேஷ், கட்சியின் மாதனூர் ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதிச் செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai