Enable Javscript for better performance
ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு: தகவல் தெரிவித்தால் சன்மானம் காவல் துறை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு: தகவல் தெரிவித்தால் சன்மானம் காவல் துறை அறிவிப்பு

    By வேலூர்,  |   Published on : 22nd July 2013 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவர் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

    மதுரையைச் சேர்ந்த பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், திருநெல்வேலி மேலபாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (எ) இஸ்மாயில் ஆகியோர் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருகின்றனர்.

    சேலத்தில் கொல்லப்பட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்புபிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இம் மூவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 9442257599 என்ற எண்ணிலும், மாவட்ட தனிப்பிரிவு காவல் அலுவலகத்தை 9488835716 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    சன்மானம் வழங்கப்படும்: தகவல் தெரிவிப்பவரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிப்பவருக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் பயமின்றி தகவல் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai