சுடச்சுட

  

  ஆர்ப்பாட்டத்தை படமெடுத்த இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை

  By வேலூர்  |   Published on : 22nd July 2013 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்திய ஆர்ப்பாட்டத்தை செல்போன் மூலம் படம்பிடித்த இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

  ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் இந்த இருவரிடம் விசாரிக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சாலையில் அமர்ந்தனர். பின்னர் மாவட்டத் தலைவர் கோ. மகேஷ் தலைமையிலானோர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.அப்போது அவர்களை அடையாளம் காண போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். இதில் ஒருவரான கள்ளிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஜின்னா (40) என்பவர் பிடிபட்டார். இவர் வேலூரில் உள்ள தனியார் கடையில் 18 ஆண்டுகளாக வேலை பார்ப்பதாகத் தெரிவித்தார். அவரை சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர்.

  தலைமறைவான மற்றொரு இளைஞர் தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள பர்மா பஜாரில் பணிபுரிபவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai