சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்'

    By வாலாஜாபேட்டை  |   Published on : 22nd July 2013 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    சங்கத்தின் வாலாஜா கிளைத் தலைவர் பி.எல்.ஜெயராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிப்பது, 31.12.1995ஆம் தேதி வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தைத் திருத்தி அமைக்கவும், மாத மருத்துவச் செலவுத் தொகையை ரூ.1000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தப்பட்ச  ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் டி.குப்பன், நிர்வாகிகள் தங்கமணி, என்.ராமதிருஷ்ணன், சி.சொக்கலிங்கம், மார்க்கண்டன், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai