Enable Javscript for better performance
கல்வி விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜபேட்டையில் கல்வி விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

    குருவராஜபேட்டை குளக்கரை அருகேயிருந்து புறப்பட்ட பேரணிக்கு செம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் பூ.பெருமாள் தலைமை தாங்கினார்.

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இணை இயக்குநர் பி.குப்புசாமி, பி.எஸ்.என்.எல். ஒய்வு பெற்ற உதவி பொதுமேலாளர் பழனி, மங்கலங்கிழார் விசைத்தறித் தொழிலாளர் சங்கச் செயலர் திருவேல், நிர்வாகி தாமோதரன், ஒய்வு பெற்ற ஆசிரியர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து, குருவராஜபேட்டை முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மங்கலங்கிழார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில், ஐ.ஏ.எஸ். படிப்புக்கான பயிற்சி வகுப்புகள், பொதுத்தேர்வுகளுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இலவசமாக நடத்துவது, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறுவோருக்குப் பரிசுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai