சுடச்சுட

  

  கோயில்களை சுதந்திரமான வாரியத்திடம் ஒப்படைக்கும்வரை போராட்டம் தொடரும்

  By வேலூர்,  |   Published on : 22nd July 2013 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓய்வு பெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள், ஆன்மிகப் பெரியவர்கள், சமூகத்தில் நேர்மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சுதந்திரமான வாரியம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அவர்களிடம் கோயில்களைப் பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதுவரை இந்து இயக்கங்கள் போராட்டத்தைக் கைவிடாது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கூறினார்.

  தமிழக கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இராம.கோபாலன் மேலும் பேசியது: கோயில்களில் சுவாமி தரிசனத்துக்குக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். கோயில்களை விட்டு அரசு வெளியேறும் வரை இந்துக்களுக்கு நீதி கிடைக்காது. இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெறுகிறது என்றார் இராம.கோபாலன்.மாநகர் மாவட்டத் தலைவர் கோ.மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai