சுடச்சுட

  

  ஆதார் அடையாள அட்டைக்கான தகவல்களைப் பதிவு செய்யப்படும்போது அனைத்து ஆவணங்களையும் எடுத்து வந்து பதிவு செய்யலாம் என்று அறிவித்தனர். ஆனால், இப்போது ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களேப் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், சொல்வதற்கு மாறாகப் பணி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

  நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பயனாளிகளின் புகைப்படம், கருவிழி, கைரேகை ஆகியன பதிவு செய்யப்படுகிறது. ஏற்கெனவே புகைப்படம் எடுக்கப்பட்ட இடங்களில், படிப்படியாக அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  ஆம்பூர் நகரில் இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தகவல்களைக் கணினியில் பதிவு செய்யும் பொழுது அஜாக்கிரதையுடன் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

  அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யலாம்?

  இதுதொடர்பாக ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் ஆதார் அட்டைக்கான குழுவினர் பேசும்போது, முகாம் நடைபெறும்பொழுது ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து அடையாள அட்டையிலேயே ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.  வங்கிக் கணக்கு புத்தகம் இல்லையெனில் பயனாளிகள் வழங்கும் ஆதாரங்களைக் கொண்டு நாங்களே வங்கி கணக்கை தொடங்கி கொடுக்கிறோம்.  மத்திய அரசின் மானியங்களை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைத்து தர இது ஏதுவாக இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒரேயொரு ஆதாரம் வைத்திருப்பவர்கள் அதனை மட்டும் கொண்டு வந்து ஆதார் அடையாள அட்டைக்காகப் பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

  கூடுதல் ஆவணங்கள்

  பதிவு செய்ய மறுப்பு!

  இப்போது முகாமில் பெரும்பாலானவர்களிடம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதால் அவர்கள் அதனை கொண்டு வந்து முகாமில் புகைப்படம், கருவிழி, கைரேகை ஆகியவற்றை பதிவு செய்து கொண்டதற்கான பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சியை வழங்குகிறார்கள்.

  ஆனால், கூடுதல் ஆவணங்களைப் பதிவு செய்ய அவர்கள் மறுக்கின்றனர். இதுகுறித்து கேட்டால், "ஏதேனும் ஒரு ஆதாரம் மட்டும் இருந்தால் போதுமானது.  மற்றவை பதிவு செய்ய வேண்டியவை அவசியமில்லை' என்று கூறுகின்றனர்.  ஆதார் அடையாள அட்டைக்கு விவரங்களை பதிவு செய்யும் முகாம் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கும் விவரங்களுக்கும், நடைமுறையில் முகாமில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் செயலுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் பொதுமக்களிடையே  குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  எனவே, சொன்னவற்றை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai