சுடச்சுட

  

  குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

  அங்குள்ள தொடக்கப் பள்ளி சத்துணவு மையத்திலேயே, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை உணவு சமைத்து விநியோகிக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சத்துணவு மையத்துக்கு புதிதாக கட்டடம் கட்டி திறக்கப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சாமிநாதன் தலைமை வகித்தார். குடியாத்தம் வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கோதண்டன் திறந்து வைத்தார்.

  வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.டிக்காராம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் சி.ஏ.ஏகாம்பரம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மெய்ஞானம் (தட்டப்பாறை), ஜி.வளர்மதி(சின்னலபல்லி), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சக்கரபாணி, பரமசிவம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சரவணன், கோ.துரைராஜ், சக்தி ஆறுமுகம், உஷா கஜராஜ், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai