Enable Javscript for better performance
தினம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    தினம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் முதல்வர்

    By குடியாத்தம்  |   Published on : 22nd July 2013 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்துக்கு தினம் ஒரு திட்டத்தை அறிவித்து அவற்றையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் முதல்வர் என நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.

    வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குடியாத்தம் காந்தி நகரில் இப்பேரணியைத் அவர் தொடங்கி வைத்துப் பேசியது: முதல்வர் ஜெயலலிதாவின் சாதுர்யமான நடவடிக்கையால் தனியாருக்கு விற்பனை செய்வதாக இருந்த என்.எல்.சி. பங்குகள் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.

    இது போன்ற பல நிகழ்வுகள் ஜெயலலிதா பிரதமராவதற்கு நல்ல அறிகுறிகளாக அமைந்துள்ளன.

    தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தினம் ஒரு திட்டத்தை அறிவித்து அவற்றையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் என்றார் அவர்.

    மோட்டார் சைக்கிள் பேரணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் செ.கு.தமிழரசன், சு.ரவி, வி.கே.ஆர். சீனிவாசன், கே.ஜி.ரமேஷ், கு.லிங்கமுத்து, வேலூர் மாநகர மேயர் பி.கார்த்தியாயினி, ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சுகுமாரன், ஒன்றியச் செயலர் எஸ். கோதண்டன், நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, மாவட்ட விவசாய பிரிவுச் செயலர் வி.ராமு, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பேரணி கே.வி.குப்பம், வடுகந்தாங்கல், லத்தேரி வழியாக காட்பாடியை அடைந்தது. அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai