சுடச்சுட

  

  பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குதான். இலவச கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய 3 மட்டுமே இலவசமாகத் தருவோம் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏழுமலையின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க பெருங்களத்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அன்புமணி ராமதாஸ் மேற்கண்டவாறு கூறினார்.

  விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

  ராமதாஸ் கைது செய்து அலைக்கழிக்கப்பட்டதால், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

  இப்போது அவர் உடல்நலத்துடன் உள்ளார். விரைவில் மக்களை சந்திக்க வருவார். பாமகவை ஆதரித்தால், 2016-ல் ஆட்சிக்கு வருவது உறுதி என்றார்.

  பாமக தலைவர் ஜி.கே.,மணி, துணைப் பொதுச்செயலர் எம்.கே.முரளி, முன்னாள் எம்எல்ஏ கோ.ரவிராஜ், இளைஞர் அணி துணைச் செயலர் தீனதயாளன், மாணவர் சங்கச் செயலர் பிரபு, வன்னியர் சங்கத் துணைத் தலைவர் மின்னலான், கட்சியின் மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் சி.ஜி.ராமசாமி, பேச்சாளர் தம்பிஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai