சுடச்சுட

    

    "பாலாற்றுப் படுகையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

    By 'வேலூர்  |   Published on : 22nd July 2013 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் பாலாற்று படுகையில் தொடரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி கேட்டுக் கொண்டார்.

    வேலூரில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் பாலாற்றை பாதுகாக்கவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தோல் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதைத் தடுக்கவும் வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

    தமிழக அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை. வருவாய்த் துறையும், வேளாண்மைத் துறையும் சரிவர கணக்கெடுக்கத் தவறிவிட்டன. இதை மீண்டும் முழுமையாகக் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் கிடைக்க வலியுறுத்தி இம்மாதம் 29-ம் தேதி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் சின்னசாமி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai