Enable Javscript for better performance
\\\"ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்'

    By வாலாஜாபேட்டை,  |   Published on : 22nd July 2013 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    வாலாஜாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ரேஷன் கடை பணியாளர்களை ஒரு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.  ஐந்தாண்டு முடிந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்த அடிப்படையில் ஊதிய முறையைப் பின்பற்றி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 500 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு விற்பனையாளரை நியமிக்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை ஆட்சியர் தலைமையில் பணியாளர்களின் குறைதீர்க் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆ.ஜீவா தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணி வரவேற்றார்.

    மாநிலத் துணைப் பொதுச்செயலர் வா.லோ.மாணிக்கம், மாநிலத் துணைத் தலைவர் இரா.சத்தியநாதன், மாவட்ட நிர்வாகிகள் பிச்சாண்டி, அரப்பாக்கம் ரவி, இரமேஷ்,மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai