சுடச்சுட

    

    வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா

    By அரக்கோணம்  |   Published on : 22nd July 2013 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 95 சதவீதத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்று அதிமுக மகளிர் அணியின் செயலரும் தூத்துக்குடி மேயருமான சசிகலா புஷ்பா கூறினார்.

    அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக வேலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது:

    மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் 6-ல் பெண்களை மேயர்களாக பதவியில் அமர்த்தியவர் முதல்வர்.

    மக்கள் நலன் ஒன்றை மட்டுமே முன்வைத்து ஆட்சி செய்து வரும் முதல்வரை உலகில் பலரும் பாராட்டுகின்றனர்.

    வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து, முதல்வரை பிரதமராக்க வேண்டும் என்றார் சசிகலா புஷ்பா.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி துணைச் செயலரும் திருப்பூர் மேயருமான ஏ.விசாலாட்சி, மாவட்ட மகளிர் அணிச் செயலர் பவாணி கருணாகரன், துணைச் செயலர் கே.எம்.கலைச்செல்வி, கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு, எம்எல்ஏக்கள் சு.ரவி, வி.கே.ஆர்.சீனிவாசன், முன்னாள் எம்பி சி.கோபால், முன்னாள் அமைச்சர் ஆர்.வில்வநாதன், நகரச் செயலர் துரைகுப்புசாமி, நெமிலி ஒன்றிய செயலர் ஏ.ஜி.விஜயன், ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலர் மல்லிகேஸ்வரன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலர் அருள்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai