சுடச்சுட

  

  வேலூரில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனுக்கு நினைவு இல்லம் தோட்டப்பாளையம் பகுதியில் கட்டப்படும் என்று இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் தெரிவித்தார்.

  வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில், இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் திரளானோர் பங்கேற்று வெள்ளையப்பனின் சிறப்புகளை எடுத்துக்கூறி நினைவஞ்சலி செலுத்தினர். இதன் நிறைவாக இராம.கோபாலன் பேசியது:

  வெள்ளையப்பன் இந்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உத்வேகமும்,  இனிமையாக பேசும் தன்மையும், எந்த அணுகுமுறையிலும் நிதானத்தையும், செயலில் சுறுசுறுப்பையும் கொண்டவராகத் திகழ்ந்தவர். அவர் மறைந்தாலும், அவரை போல் 1,000 பேரை இந்து சமுதாயத்துக்கு உழைக்க உருவாக்கி சென்றிருக்கிறார்.

  அவரது நினைவாக வேலூர் தோட்டப்பாளையத்தில் நினைவு இல்லம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இல்லத்துக்கான இடம் வாங்குவதற்கு ரூ.1 கோடி தேவைப்படுகிறது. நானும் கணிசமான தொகையை அளிக்கிறேன். மற்ற இந்து சமுதாயப் பற்றாளர்களும் முன்வருவர் என நம்புகிறேன் என்றார் இராம.கோபாலன்.

  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai