சுடச்சுட

    

    அதிமுக பேரணியில் சென்ற வாகனம் மோதி முதியவர் காயம்

    By வேலூர்,  |   Published on : 23rd July 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கே.வி.குப்பம் அருகே அதிமுக பேரணியில் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் காந்திநகரில் தொடங்கி, காட்பாடி வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடை

    பெற்றது.

    அப்போது கே.வி. குப்பத்தை அடுத்த பி.கே. புரத்தைச் சேர்ந்த முதியவர் கங்காதரன்(70), நீலகண்டபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அவர் மீது பேரணியில் சென்ற மோட்டார் பைக் ஒன்று மோதியது.

    இதில் காயமடைந்த கங்காதரனை கே.வி. குப்பம் போலீஸார் காவனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேரணியில் வந்த கே.வி. குப்பம் எம்எல்ஏ செ.கு.தமிழரசன் தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்று முதியவரிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர் கங்காதரன் தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து கே.வி. குப்பம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai