சுடச்சுட

    

    இளைஞரின் உறுப்புகள் தானம்: பெற்றோருக்குப் பாராட்டு

    By வேலூர்,  |   Published on : 23rd July 2013 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞர் விஷ்ணுகுமாரின் உடல் உறுப்புகள் அண்மையில் தானமாக வழங்கப்பட்டன.   இதையொட்டி அவருடைய பெற்றோருக்கு வேலூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் இரா.ப.ஞானவேலு தலைமை தாங்கினார். பாபு அசோகன் வரவேற்றார். காமராஜர் படத்தை வணிகர் சங்கப் பேரவை துணைத் தலைவர் ஏ.பாலு திறந்து வைத்தார். சிவந்திஆதித்தன் படத்தை வேலூர் நெல் அரிசி மண்டி சங்கத் தலைவர் சி.பி.சுப்பிரமணி திறந்து வைத்தார்,

    இளைஞர் விஷ்ணுகுமாரின் படத்தை திறந்து வைத்து அவரின் பெற்றோர் பொன்னுசாமி, வனிதா தம்பதிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மாநகராட்சி உறுப்பினர் பி.கோதண்டபாணி வாழ்த்திப் பேசினார். இதில் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல்கள் வழங்கப்பட்டன.  உதவும் உள்ளங்கள் செயலாளர் ஆர்.சந்திரசேகரன், ஆர்.பிச்சாண்டி, சிவக்குமார், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai