சுடச்சுட

    

    குடியாத்தம் உழவர் சந்தை: ஆட்சியரிடம் கோரிக்கை

    By குடியாத்தம்  |   Published on : 23rd July 2013 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் கிடைத்ததையொட்டி உழவர் சந்தை அதே இடத்தில் தொடர்ந்து இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    குடியாத்தம் ராபின்சன் குளத்தில் தூரெடுக்கும் பணிகள் நடந்து வருவதால் அதனருகே 14 ஆண்டுகளாக இயங்கி வரும் உழவர் சந்தையின் ஒரு பகுதி சுற்றுச் சுவர் சரிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் கிடைத்தது. இத்தகவலையடுத்து, அதே இடத்தில் உழவர் சந்தை தொடர்ந்து இயங்க வேண்டும் எனக்கோரி  திங்கள்கிழமை காலை கடைகளை திறக்காமல், இவர்கள் உழவர் சந்தை அருகிலிருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். அங்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர். பாலாஜி நாயுடு, கொள்கை பரப்புச் செயலர் கே.எம். நந்தகோபால், மாவட்டத் தலைவர் டி.சி. ஜெகன்நாதன் மற்றும் வியாபாரிகள் வட்டாட்சியர் எம். கஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் வேலூர் சென்று மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai