சுடச்சுட

  

  வேலூர், சத்துவாச்சாரியில் மரக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  வேலூர், சத்துவாச்சாரி நேரு நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது 3 மகன்களில் ஒருவர் குருலிங்கம் (34). இவர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் மரக்கடை வைத்துள்ளார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த சித்ரா (25)என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்தை அடுத்து இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் சித்ரா அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

  குருலிங்கம் பல நேரங்களில் மரக்கடையிலேயே இரவில் தங்குவது உண்டாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மரக்கடையில் தங்கிய இவரை மர்ம நபர்கள் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். சத்துவாச்சாரி காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்தில் முகாமிட்டு குருலிங்கத்தின் சடலத்தை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  சம்பவ இடத்தில் கிடந்த மதுபாட்டில், உணவுப் பொட்டலங்கள், ரத்தக்கறையுடன் காணப்பட்ட மரச்சட்டம் மற்றும் தடயங்களை சேகரித்த போலீஸார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai