சுடச்சுட

    

    மாணவர் காங்கிரஸ் மறுதேர்தலுக்கான வாக்குப் பதிவு

    By வேலூர்  |   Published on : 23rd July 2013 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மறுதேர்தலுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

    இவ்வமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்தலில் தவறு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, மாநில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான மதுரை, தஞ்சாவூர், திருப்பூர், வேலூர் ஆகிய இடங்களில் இதற்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

    இத்தேர்தலில் சுனில் ராஜா, ஈஸ்வரமூர்த்தி, தினேஷ்கண்ணா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மண்டபத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவை மாணவர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் மந்தல்பார்டர் நடத்தினார். வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 800 நிர்வாகிகளில் 260 பேர் வாக்களித்தனர்.

    மாலை 4 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப் பெட்டி சீலிடப்பட்டு சென்னைக்கு இரவு கொண்டு செல்லப்படுகிறது என்று தேர்தல் பார்வையாளர் மதன் பதக் தெரிவித்தார்.

    சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai