சுடச்சுட

    

    ஆற்காடு அருகே அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த தனியார் நர்சரி பள்ளிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

    மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் ஆற்காடு வட்டத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த அருணாசலா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அரசின் அங்கீகாரம் பெறாமல் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, ஆற்காடு வாட்டாட்சியர் கௌரி, திமிரி வட்டார வளமைய (எஸ்எஸ்ஏ) மேற்பார்வையாளர் அன்பழகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கருணாகரன், உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் அந்த பள்ளியை மூடி சீல் வைத்தனர்.

    அரசின் அங்கீகாரம் பெறாத இப்பள்ளியில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என்ற அறிவிப்பு நோட்டீûஸயும் ஒட்டிவிட்டுச் சென்றனர். வாழப்பந்தல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai