Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாமில் 154 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அம்மா திட்ட முகாமில் 154 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    By ராணிப்பேட்டை,  |   Published on : 24th July 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழ்மின்னல், பூட்டுத்தாக்கு ஆகிய ஊராட்சிகளுக்கான அம்மா திட்ட முகாம் ரத்தினகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரியா தண்டபாணி, புனிதா நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.சி.ஏழுமலை, ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி, துணைத் தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி வரவேற்றார்.

    முகாமில் ராணிப்பேட்டை எம்எல்ஏ அ.முகமது ஜான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

    முகாமில் 346 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 154 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பிரியா ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வசந்தி ராஜலிங்கம், சித்ரா ராஜி, ராணிப்பேட்டை நகர்மன்ற உறுப்பினர் கே.பி.சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஆற்காடு வட்டத்தில்...: இதேபோல் ஆற்காடு வட்டம் தாஜ்புரா, சாத்தூர் ஆகிய ஊராட்சிகளிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் எஸ்.கௌரி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுமிதா வேல்முருகன், வட்ட வழங்கல் அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai