சுடச்சுட

    

    அரசினர் மாணவியர் விடுதியில் அமைச்சர் ஆய்வு

    By வாணியம்பாடி  |   Published on : 24th July 2013 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அரசினர் மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதாக எழுந்த புகாரையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு திடீர் ஆய்வு செய்தார்.

    இதையடுத்து விடுதிக் காப்பாளர், 2 சமையலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி அளவில் அரசினர் மாணவியர் விடுதிக்கு வந்த அமைச்சர், மாணவிகள் அனைவரையும் அழைத்து குறைகளைக் கேட்டறிந்தார்.

    மேலும் விடுதிக் காப்பாளர் பிரேமகுமாரி, சமையலர் லட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்.

    அதன் அடிப்படையில் பிரேமகுமாரி, லட்சுமி மற்றும் விடுமுறையில் உள்ள மற்றொரு சமையலர் விமலா ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இவர்களுக்கு பதிலாக திருப்பத்தூரிலிருந்து விடுதிக் காப்பாளர், சமையலர்களை தாற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட்டார்.

    பின்னர் விடுதியில் எரியாமல் உள்ள மின்விளக்குகள், சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் உடனடியாக சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் விடுதியின் பின்புறம் புதர்மண்டியுள்ள பகுதியை சீர்செய்து சுற்றுச் சுவரின் அளவை உயர்த்திக் கட்டவும் உத்தரவிட்டார்.

    ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவிகள் கூறிய அனைத்துக் குறைகளையும் களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் நலன்கள் காக்கப்படும் என்றார்.

    மாவட்ட வருவாய்

    அலுவலர் ஆய்வு

    முன்னதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பலராமன் விடுதியில் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியே அழைத்து குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் விடுதியைச் சுற்றிப் பார்த்து மின்விளக்குகள் இல்லாமல் இருப்பதையும், கழிப்பிடங்கள் மோசமான நிலையில் இருப்பதையும் கண்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனே அவற்றை சீரமைக்கும்படி உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai