சுடச்சுட

    

    அழுகிய முட்டைகள் விநியோகம் ஆம்பூரில் சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு

    By ஆம்பூர்  |   Published on : 24th July 2013 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக ஆம்பூர் சத்துணவு மையங்களிலும், மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தமிழக சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

    ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் அழுகியிருந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் பாலையாவை இடைநீக்கம் செய்தும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சிவப்பிரகாசம் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து, சத்துணவு மையங்களில் திங்கள்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அமைச்சர் ஆய்வு: இத்தகைய புகார்களை தொடர்ந்து சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது சத்துணவுக் கூடத்துக்கு உடனடியாக விளக்கு போடும்படி அறிவுறுத்தினார்.

    அதைத் தொடர்ந்து ஆம்பூர் கஸ்பா-ஏ அரசினர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு சத்துணவுக் கூடத்தையும், பள்ளி வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாதனூரில் ஆய்வு: முன்னதாக மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று அங்கு முட்டைகள் மற்றும் சத்துணவுப் பொருள்கள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  

    மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர், ஆம்பூர் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா, ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி, ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வபாபு, அன்பழகன், வட்டாட்சியர் கஸ்தூரி, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் எம். மதியழகன், அதிமுக மாதனூர் ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதி செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai