சுடச்சுட

  

  வேலூரை அடுத்த சாத்துமதுரை அருகே கார் மரத்தில் மோதியதில் கணவன், மனைவி இருவரும் இறந்தனர்.

  வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரம் எம்ஜிசி நகர் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் கட்டட ஒப்பந்ததாரர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி பாரதி (30). இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இருவரும் காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றனர். காரை சதீஷ்குமார் ஒட்டினார். கிரிவலம் முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது அதிகாலை 2.30 மணியளவில் வேலூரை அடுத்த சாத்துமதுரை அருகே சாலை வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி இருவரும் அதே இடத்திலேயே இறந்தனர்.

  வேலூர் தாலுகா போலீஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நடந்த பகுதியில் ஏற்கெனவே சில விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கூறினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai