சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் அருகே கொலை கொலை வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    By வாலாஜாபேட்டை  |   Published on : 24th July 2013 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவேரிப்பாக்கம் அருகே கொலை கொலை வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    காவேரிப்பாக்கம் அருகேயுள்ள மேலபுலம் ஊராட்சிக்குள்பட்ட நங்கமங்கலம் ஏரியில் இளம்பெண் சடலம் கடந்த 17ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில், காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுவனமல்லி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அருண்குமார் (24), இவரது நண்பர்கள் கீழாந்துரைச் சேர்ந்த வெற்றிவேல் (24), தர்மநீதியைச் சேர்ந்த  பிரபாகரன் (23) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் அருண்குமாருக்கும், அடையாளம் தெரியாத இளம்பெண்ணுக்கும் 3 மாதங்களாக அரக்கோணம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்குவந்து செல்கிறபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.

    இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி திருத்தணியிலிருந்து அப்பெண்ணை அருண்குமார் அழைத்து வந்து வாடகை வீட்டில் தங்க வைத்ததாகவும், இங்கு தோல்தொழிற்சாலையில் பணியில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    14ஆம் தேதி 4 பேரும் பனப்பாக்கத்தில் உள்ள சினிமா பார்த்துவிட்டு, தர்மநீதி திரும்பியுள்ளனர். வீடு வந்தபோது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் அருண்குமாரை வலியுறுத்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பின்னர் நண்பர்கள் உதவியுடன் அருண்குமார் பெண்ணின் சடலத்தை தூக்கி கொண்டு அருகில் உள்ள கிராம ஏரி கரையில் சாக்கு மூட்டையில் கட்டி வீசியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai