சுடச்சுட

  

  சத்துணவு அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்வேலூர்

  By வேலூர்  |   Published on : 24th July 2013 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்துணவு அமைப்பாளர்கள் பின்பற்ற நடைமுறைகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

  இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

  சத்துணவு மையங்களைப் பராமரிக்க முதல்வர் ரூ.359 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அரிசி, பருப்பு, முட்டை, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை முறையாக இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். உணவு தரமானதாகவும், சரியான அளவிலும் வழங்க வேண்டும்.

  மாதம்தோறும் சத்துணவு அமைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

  சத்துணவு மையங்களில் குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சமைத்த உணவை முதலில் சத்துணவு அமைப்பாளர், ஊழியர்கள் சாப்பிட்டு பார்த்தப் பிறகே மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.

  ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஊழியர்கள் காலை 9.30 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சாப்பாடு வழங்கிய பிறகே சத்துணவு மையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முட்டையை ஆய்வு செய்த பிறகே சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து அறிவுரைகளையும் ஒருவார காலத்துக்குள் நடைமுறைக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

  சத்துணவு மையத்தில் போதிய வெளிச்சம் உள்ளதா, சமையல் செய்யும்போது பாத்திரத்தின் மீது மூடி போடப்பட்டு சமைக்கப்படுகிறதா, அரிசி நன்கு சுத்தம் செய்யப்பட்டு சமையல் செய்யப்படுகிறதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அமைச்சர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai