Enable Javscript for better performance
தகுதியானவர்களை தேர்வு செய்வதே டிஎன்பிஎஸ்சியின் நோக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தகுதியானவர்களை தேர்வு செய்வதே டிஎன்பிஎஸ்சியின் நோக்கம்

    By வாணியம்பாடி  |   Published on : 24th July 2013 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகுதியானவர்களை தேர்வு செய்து பணி வழங்குவதே டிஎன்பிஎஸ்சியின் முதன்மை நோக்கம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

    வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் பெண்கள் கல்லூரியில் தேர்வு, பணி நியமனம், வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அடுத்த மாதம் நடைபெறும் குரூப் 4 தேர்வின் மூலம் 5,566 பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வு எழுத 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இத்தேர்வு அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் நடைபெறுகிறது. தேர்வுகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படும். மேலும் பிரச்னைக்குரிய மையங்களிலும் கூடுதல் பாதுகாப்புடன் கேமரா பொருத்தப்பட்டு நேரிடையாகக் கண்காணிப்படும்.

    தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள், பணி நியமனங்கள் அனைத்தும் 100 சதவீதம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும். இதில் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். இதில் தவறு செய்யும் நபர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பேட்டியின் போது கல்லூரிச் செயலர் லிக்மிசந்த், கல்லூரி முதல்வர் கருணாகரன், கல்லூரி இணைச் செயலர்கள் உத்தம்சந்த், கல்லூரி துணை முதல்வர் அஷ்டலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai