Enable Javscript for better performance
தொழிலாளர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கால்வாய் தூரெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு வேலை செய்தவர்கள் கூலி குறைவாகக் கொடுத்ததாகக்கூறி, செவ்வாய்க்கிழமை குடியாத்தம்-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன், டிஎஸ்பி க. சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம். தனலட்சுமி உள்ளிட்டோர் அங்கு சென்று சமரசம் செய்தனர்.

    இப்பிரச்னை குறித்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் என். சண்முகசுந்தரம் தலைமையில் மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் தொழிலாளர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai