சுடச்சுட

  

  பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, வேலூரில் தமிழ்நாடு பீடி, சுருட்டு, புகையிலைத் தொழிலாளர் சம்மேளனத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பீடித் தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை அளித்து வீடு கட்டித் தர வேண்டும். கிராமப்புறங்களில் பீடித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனையை விஸ்தரிக்க வேண்டும். 5 ஆயிரம் பீடித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பீடி நல்வாழ்வு நிதியம் மூலம் மருத்துவமனைகளை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சம்மேளனத்தின் வேலூர் மாவட்ட தலைவர் கு.மு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வி.ஆர்.வெங்கடேசன், என்.மாசிலாமணி, வி.ஏ.பாஷா, எம்.ஜீவானந்தம், ஆர்.கோமதி, சுலைமான், முகமது ஆஜம், ஜீவா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  மாநிலத் தலைவர் சி.ஜி.ராஜாராம், தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் எஸ்.நசீர் அஹமது, கே.சி. கணேசன், ஏ.ஆர்.காளிதாஸ், கருணாகரன், ஆர்.சந்திரா, கே.கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வாணியம்பாடி

  வாணியம்பாடி ஐக்கிய பீடித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைச் செயலர் டி.ரத்தினம் தலைமை வகித்தார்.

  டேனரி மற்றும் பீடி சங்கச் செயலர் அன்வர், தலைவர் ராமமூர்த்தி, சங்க ஆலோசகர் ஆர்.முல்லை, சங்கத் துணைத் தலைவர் கே.சண்முகம், கே.எம்.முனீர், வரதன், டி.ஜாகீர்உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ஆம்பூர்

  ஆம்பூர், பேர்ணாம்பட்டு ஏஐடியூசி பீடி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர். தேவதாஸ் தலைமை வகித்தார்.  பீடி சங்கச் செயலர் கே.எஸ். ஹசேன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.  நிர்வாகிகள் எம். தங்கம், முனீர், அப்து, ஆர். மாயகிருஷ்ணன், ஜி. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai