சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி பெண்ணிடம் புகார் வாங்க மறுப்பு; 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடைநீக்கம்

    By வேலூர்,  |   Published on : 24th July 2013 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கந்திலி காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் அளித்த புகாரை வாங்க மறுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கந்திலியை அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் பழனி (65). இவர் கடந்த 13-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றாராம்.

    இதுகுறித்து அப்பெண் கந்திலி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் சென்றபோது, பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சம்பத்குமார், ராஜேந்திரன், கோவிந்தராஜ் ஆகியோர் புகாரை பதிவு செய்ய மறுத்தனராம்.

    அதைத் தொடர்ந்து, அப்பெண் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 18-ம் தேதி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, பழனியை போலீஸார் கைது செய்தனர்.

    இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐஜி கண்ணப்பன் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக திங்கள்கிழமை விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், மூவரையும் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai