Enable Javscript for better performance
கல்லூரி மாணவியை ஏமாற்றியதாக ராணுவ வீரர் கைது - Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவியை ஏமாற்றியதாக ராணுவ வீரர் கைது

    By ராணிப்பேட்டை  |   Published on : 25th July 2013 10:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையை அடுத்த மேல்பாடி அருகே உள்ள சின்ன கீசகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் தேன்மொழி (19), கல்லூரி மாணவி.

    இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான ஆனஸ்ட்ராஜ் (21) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறையில் அவர் தனது சொந்த ஊரான சின்னகீசகுப்பம் கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்ளும்படி ஆனஸ்ட்ராஜியிடம் தேன்மொழி கேட்டுள்ளார். அப்போது ஆனஸ்ட்ராஜ் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேன்மொழி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழி இது குறித்து ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராணிப்பேட்டை மகளிர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய் தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai