Enable Javscript for better performance
காவல் நிலையம் எதிரே உண்ணாவிரதம்: பெண்கள் உள்பட 9 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையம் எதிரே உண்ணாவிரதம்: பெண்கள் உள்பட 9 பேர் கைது

    By குடியாத்தம்  |   Published on : 25th July 2013 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கே.வி.குப்பம் காவல் நிலையம் எதிரே அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக சேவகர் சக்திவேல் (55). இவர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீஸôர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக்கூறி புதன்கிழமை காலை காவல் நிலையம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    அவருக்கு ஆதரவாக 3 பெண்கள் உள்பட 8 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக இவர்கள் 9 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai