சுடச்சுட

    

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு குறைந்த கூலி வழங்கப்படுவதாகக் கூறி தொழிலாளர்கள் ஆம்பூரை அடுத்துள்ள சோலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    குறைந்த கூலி தரப்படுவதாகவும், சுமார் 5 வாரங்களாக அதுவும் தரப்படுவதில்லையென்றும் கூறி சோலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்த உடன் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், ஆம்பூர் தாலுகா போலீஸார் ஆகியோர் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai