சுடச்சுட

    

    கூடங்குளம் 2-ஆவது அணுஉலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு

    By வள்ளியூர்  |   Published on : 25th July 2013 11:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடங்குளம் 2-ஆவது அணுஉலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்தித் திறனுள்ள 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணுஉலையில் கடந்த 13-ஆம் தேதி இரவு முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2-ஆவது அணுஉலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி இப்போது நிறைவு பெற்றுள்ளது.

    முதல் அணுஉலையில் உள்ளதுபோன்றே 2-ஆவது அணுஉலையிலும் 163 எரிபொருள் கற்றைகள் உள்ளன. இவை அனைத்திலும் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு வெப்பநீர் சோதனை ஓட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.

    முதல் அணுஉலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சோதனைரீதியாக தென்மண்டல மின்சார சுற்றில் இணைக்கப்பட்ட பின்னர், 2-ஆவது அணுஉலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai