சுடச்சுட

    

    இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் திரைப்பட இயக்குநர் சீமானுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆஜராக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திரைப்பட இயக்குநர் மனோபாலா தலைமையில் கடந்த 19.10.2008 அன்று, இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ராமேசுவரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்துவந்த முதன்மை நீதிபதி டபிள்யூ. சதாசிவம் கடந்த 19.7.2013 அன்று ஆஜராகுமாறு சீமானுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தும், அவர் நேரில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீமான் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானதை முன்னிட்டு, அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவைத் தளர்வு செய்தும், வழக்கு விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai