Enable Javscript for better performance
தனியார் கல்லூரியில் ரூ.5 லட்சம் கம்ப்யூட்டர் பாகங்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் கல்லூரியில் ரூ.5 லட்சம் கம்ப்யூட்டர் பாகங்கள் திருட்டு

    By வாலாஜாபேட்டை  |   Published on : 25th July 2013 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோளிங்கர் அருகே தனியார் கல்லூரியில் மர்ம நபர்கள் கணினி அறையை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் பாகங்களைச் திருடிச் சென்றுள்ளனர்.

    சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது. திங்கள்கிழமை மாலை வழக்கம்போல் வகுப்புகள் முடிந்தவுடன் கல்லூரியை பூட்டிச்சென்றனர். இரவுக் காவலாளி லோகநாதன் (55) பணியில் இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கணினி அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த 5 மானிட்டர்கள் மற்றும் 28 கம்ப்யூட்டர்களின் முக்கிய உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

    இச்சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் ரூபஸ் மாணிக்கதாஸ் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சோளிங்கர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai