சுடச்சுட

  

  திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  By dn  |   Published on : 25th July 2013 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளுவர் பல்கலைக்கழக தாற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கெüரவத் தலைவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் குமார், சங்கத்தின் தலைவர் சிவா, செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுப்பூதிய அடிப்படையிலும், தினக்கூலியாகவும் பணிபுரியும் பணியாளர்களை விரைந்து பணி நியமனம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai