சுடச்சுட

    

    திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் புதன்கிழமை மாலை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

    பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் 96 மையங்களில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இதில் முதுகலை பட்டப் படிப்பு மாணவர்கள் 7 ஆயிரத்து 492 பேரும், இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்கள் 97 ஆயிரத்து 207 பேரும் பங்கேற்றனர்.

    வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி, திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் அரசினர் கலைக் கல்லூரி, கடலூர் பெரியார் அரசினர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் விடைத் தாள்கள் திருத்தப்பட்டன.

    இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்களின் 8 லட்சத்து 71 ஆயிரத்து 310 விடைத் தாள்களும், முதுகலை பட்டப் படிப்பு மாணவர்களின் 50 ஆயிரத்து 899 விடைத் தாள்களும் அண்மையில் திருத்தி முடிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள கடந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    தேர்வு முடிவுகள் புதன்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சையத் ஷபி தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai