சுடச்சுட

    

    குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள செங்குந்த மரபினரின் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, புதன்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெற்றன.

    இக்கோயில் வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக மகாபாரத தொடர்ச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி புதன்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், காலை 9 மணிக்கு துரியோதனன் படுகளமும் நடைபெற்றன.

    மாலை பச்சையம்மன் கோயில் அருகிலிருந்து கரகம் எடுக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து தீ மிதி விழா நடைபெற்றது.

    செங்குந்தர் நிர்வாகக் குழுத் தலைவர் கே.எம். மகாலிங்கம் தலைமை வகித்தார். செயலர் ஏ.டி. சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் டி.ஆர். கிருபானந்தம், எஸ்.எஸ். யோகாநந்தம், சி. கார்த்திகேயன், எம். சோமசுந்தரம், எஸ்.எஸ். முருகேசன், கே.டி. பார்த்திபன், எஸ்.என். சுந்தரேசன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ். சௌந்தரராஜன், நகர்மன்ற உறுப்பினர் கே.எம். அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வியாழக்கிழமை இரவு சென்னை லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai