Enable Javscript for better performance
தொழிற்சாலையைத் திறக்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே தகராறு காரணமாக மூடப்பட்டுள்ள தோல் தொழிற்சாலையைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு திருப்பத்தூர் சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகரிடம் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

    வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்தாபூர் ரஹ்மான், முஹம்மத் சித்திக், முஹம்மத் சவூத். இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையை உரிமை கொண்டாடுவதில் இவர்களுக்கும் இன்னொரு கோஷ்டிக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொழிற்சாலைக்குள் நுழைந்த ஒரு கும்பல் தொழிற்சாலையை சேதப்படுத்தி, அங்கு பணியாற்றிய ஊழியர்களை வெளியேற்றி ஆலையை மூடியதாகத் தெரிகிறது.

    இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளர்களில் ஒருவரான அல்தாபூர் ரஹ்மான் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வேலை இழந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பத்தூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அதில் "தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நாங்கள் பணியை இழந்துள்ளோம். இதனால் எங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. எனவே தொழிற்சாலையைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கோரியுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சார்-ஆட்சியர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai