சுடச்சுட

  

  நவீன வடிவமைப்புப் போட்டி:விஐடி மாணவர்கள் முதலிடம்

  By வேலூர்  |   Published on : 25th July 2013 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவில் அண்மையில் நடைபெற்ற கோர்யெல் டிஜிலெண்ட் டிசைன் போட்டியில் விஐடி பி.டெக். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மாணவர்கள் ஜெகன்மோகன், தினேஷ்குமார் முதல் பரிசாக ரூ.40 ஆயிரத்தையும், கேடயத்தையும் பெற்றனர்.

  இருவரும் வடிவமைத்து உருவாக்கிய வாய்மொழி உத்தரவில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட்வீல் சேர் முதலிடம் பெற்றது.

  இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 240 மாணவர்கள், 88 பேராசிரியர்கள் அடங்கிய 102 குழுக்கள் பங்கேற்றன. இதில், பேராசிரியர் என்.ரமேஷ்குமார் பாபு வழிகாட்டுதலில் பங்கேற்ற விஐடி மாணவர்கள் ஜெகன்மோகன், தினேஷ்குமார் ஆகியோர் சமர்ப்பித்த வடிவமைப்பு திட்ட அறிக்கைகள் நிபுணர் குழுவால் தேர்வு செய்யப்பட்டது.

  அதைத் தொடர்ந்து, பெங்களூரில் நடந்த இறுதிப் போட்டியில், சிறந்த வடிவமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. முதல் பரிசு பெற்ற மாணவர்களையும், வழிகாட்டி பேராசிரியரையும் விஐடி நிர்வாகம் பாராட்டியது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai