சுடச்சுட

  

  பள்ளி, கோயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை இடம் மாற்ற பாமக கோரிக்கை

  By வாணியம்பாடி  |   Published on : 25th July 2013 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளிகள், கோயில்கள் அருகே உள்ள அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை வேறு பகுதிக்கு இடம் மாற்ற வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

  வேலூர் வடமேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் வாணியம்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கோ.திருப்பதி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா கலந்துகொண்டார்.

  கூட்டத்தில் வாணியம்பாடி-தும்பேரி கூட்டுச்சாலை, உதயேந்திரம்-மேட்டுப்பாளையம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் பள்ளிகள், கோயில்கள் அருகிலேயே அமைந்துள்ளன. அவற்றை வேறு இடத்துககு மாற்ற வேண்டும்.

  வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. எனவே குடிநீர் தட்டுபாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பாமகவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், நகரத் தலைவர் பொன்.வெங்கடேசன், ஆம்பூர் நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெற்றிக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் தியாகராஜன், தினேஷ், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai