Enable Javscript for better performance
பாஜக மாநில பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக மாநில பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 25th July 2013 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே பாஜக மாநில பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, அவருக்கு புதன்கிழமைமுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாஞ்சாலியூரைச் சேர்ந்தவர் முனவரி பேகம் (47). இவர் பாஜக மாநிலத் துணைத் தலைவராகவும், சிறுபான்மைப் பிரிவு தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார்.

    இவரது கணவர் அமரேசன். இவர் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

    முனவரி பேகத்தை செவ்வாய்க்கிழமை இரவு வெவ்வேறு தொலைபேசி எண்களிலிருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எஸ்.ஆர்.செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

    மனு விவரம்: பாஜக மாநில நிர்வாகியான எனக்கு செவ்வாய்க்கிழமை மாலை வெளிநாட்டு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. மறுமுனையில் துபையிலிருந்து அப்துல் ரகுமான் பேசுவதாகத் தெரிவித்தார். மேலும், நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரபேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய விடியோ காட்சிகளை அவர் இணையதளத்தில் பார்த்ததாகவும், மத அடையாளத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த நபர் கூறியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும், தொடர்ந்து பல்வேறு வெளிநாட்டு தொலைபேசி எண்களிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்தன என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து, முனவரி பேகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை முனவரி பேகத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai