சுடச்சுட

    

    வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

    வாணியம்பாடி நியூடவுன் அரசு மாணவியர் தங்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற நிலையில் விடுதி இருப்பதாகவும் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து, விடுதி காப்பாளர் உள்பட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, முட்டைகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை வாணியம்பாடி அரசினர் மாணவியர் மற்றும் மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்தும், வசதிகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது வாணியம்பாடி வட்டாட்சியர் கீதாராணி, கிராம நிர்வாக அலுவலர் சந்தானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai